உலகம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. ஆனால் வட கொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவாமல் இருந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி தங்கள் நாட்டில் கொரோனா பரவி விட்டது என்று வடகொரியா வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 8 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 3,92,920 பேருக்கு காய்ச்சல் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காய்ச்சல் அறிகுறிகள், உயிரிழப்புகளில் எத்தனை பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வடகொரியா இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தனது கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மக்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று அரசியல் விவகார குழு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றப்படவில்லை, அவர்கள் பொறுப்பேற்ற முறையில் நடந்துகொண்டனர். மேலும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே எனது ராணுவத்தில் உள்ள மருத்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் விநியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.