தனுசு ராசி அன்பர்கள்…!! இன்று உள்ளத்தில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதை கண்டு கொள்வீர்கள். அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்கள். சிறிய செயலையும் இன்று நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள்.இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் கூடும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.
இன்று மாணவர்களுக்கு பாடம் படிப்பது மன மகிழ்ச்சியை கொடுக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். இன்று உறவினர் வருகை இருக்கும். அவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும் செலவும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலை பொருத்தவரை இன்று எந்த பிரச்சனையும் இல்லை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தை பற்றிய பேச்சுவார்த்தை செய்யுங்கள். எல்லாமே உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மற்றும் வெள்ளை நிறம்