மேஷ ராசி அன்பர்கள், இன்றுநன்கு பழகியவரிடம் பேசுவதில் கொஞ்சம் நிதானத்தை பின்பற்ற வேண்டும், தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை பாதுகாப்பது ரொம்ப நல்லது. மிதமான அளவில்தான் பணவரவு கிடைக்கும். வீடு , வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும், மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவதும் நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள், விருந்தினர்கள் வந்து செல்வார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும், இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று உறவினர் வகையில் உங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு நன்றாகவே நடக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் காவி
ரிஷப ராசி அன்பர்களே, வெகுநாள் நீங்கள் திட்ட மிட்ட காரியம் ஒன்று சிறப்பாக நிறைவேறும், தொழில் வியாபாரம் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், உபரி வருமானமும் கிடைக்கும் பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும், தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். நிதி உதவியும் கிடைக்க பெறுவீர்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். சம்பளம் உயர்வு போன்றவையும் வரும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும், நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள், அதுமட்டுமில்லாமல் விளையாட்டுத் துறையிலும் முன்னேறி செல்விர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்
மிதுனம் ராசி அன்பர்கள்…!! இன்று செயல்களை ஆர்வமுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி அடைந்து நம்பிக்கை கொடுக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் அறப்பணி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்கக்கூடும். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று மனதில் உள்ள குழப்பங்கள் தீரும். சரி என்று நினைப்பதை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும் மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்குவீர்கள். தயவுசெய்து இன்று நீங்கள் செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதுமட்டுமில்லாமல். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்
கடக ராசி அன்பர்கள்…!! இன்று எதிரிகள் இடம் மாறி போகின்ற நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டின் தேவைகள் திருப்திகரமாக நிறைவேறும். பெண்கள் தாய் வீட்டிற்கு உதவிகளை செய்வார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்லவேண்டியிருக்கும்.
வியாபாரம் தொடர்பான செலவுகளும் அதிகரிக்கும். உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன் வாங்குவீர்கள். இன்று ஆடம்பரமாக செலவு செய்ய தோன்றும். வீடு மனை வாங்க போட்ட திட்டம் சிறப்பாக நிறைவேறும். சிலர் புதிய வாகனம் வாங்க கூடும். இன்று மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றமும் ஆர்வமும் மிகுந்து காணப்படும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பிங்க் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
சிம்மம் ராசி அன்பர்கள், இன்று முக்கிய செயல் கொஞ்சம் தாமதமாகலாம் தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும், குறைந்த அளவில்தான் பண வரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.
பெண்களுக்கு மன தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது, தேவையான உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும், பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எழுதிப்பாருங்கள் அதாவது எந்த ஒரு பாடத்தையும் படித்த பின்பு எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு
கன்னி ராசி அன்பர்கள், இன்று புதியவர்கள் உதவி கேட்டு உங்களை தொந்தரவு செய்யக்கூடும், இயன்ற அளவில் நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாகவே பணிபுரிவீர்கள், பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். பயணத்தில் பாதுகாப்பை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் அலைய வேண்டியிருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும் அதேநேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று அக்கம் பக்கத்தாரின் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். திருமண முயற்சிகள் கூட ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும், ஆசியர்கள் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை
துலாம் ராசி அன்பர்கள், இன்று நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நன்மை பெற உதவும், தொழில் வியாபாரத்தில் இலக்கை எளிதாக நிறைவேறும், ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும், நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆடை ஆபரணம் வாங்குவீர்கள்.
எடுத்த காரியமும் நல்லபடியாகவே நடக்கும், அதே போல கொஞ்சம் மன கவலை இருக்கும், எதைப் பற்றியும் கவலைப் படாமல் காரியத்தை மட்டும் எதிர்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும், ஆசிரியரின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதற்கு உதவும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் ஊன்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்
விருச்சிகம் ராசி அன்பர்கள், இன்று பலரும் உங்களை அன்பு பாராட்டக் கூடும், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், தாராள அளவில் பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காணாமல் தேடிய பொருளை இன்று அதிர்ஷ்டவசமாக கிடைக்க பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள், எதையும் சாதிக்கும் திறமையும் ஏற்படும். வெளியில் தங்கும் சூழல் உருவாகும். எடுத்த காரியத்தை செய்யும் போது, எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் கொஞ்சம் ஏற்பட்டாலும், உங்களுடைய அபார திறமையால் அதை பக்குவமாக செய்து முடிப்பீர்கள். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படவேண்டிய சூழல் இருக்கும். திருமண முயற்சியும் இன்று நல்ல படியாகவே நடக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கு. அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு
தனுசு ராசி அன்பர்கள்…!! இன்று உள்ளத்தில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதை கண்டு கொள்வீர்கள். அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்கள். சிறிய செயலையும் இன்று நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள்.இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் கூடும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.
இன்று மாணவர்களுக்கு பாடம் படிப்பது மன மகிழ்ச்சியை கொடுக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். இன்று உறவினர் வருகை இருக்கும். அவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும் செலவும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலை பொருத்தவரை இன்று எந்த பிரச்சனையும் இல்லை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தை பற்றிய பேச்சுவார்த்தை செய்யுங்கள். எல்லாமே உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்கள்…!! இன்று எந்த ஒரு செயலையும் நீங்கள் சாமர்த்தியமாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். இன்று ரகசியத்தை பாதுகாப்பது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக தான் இருக்கும். செலவில் சிக்கனம் வேண்டும். நீண்ட தூர பயணங்களில் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். இன்று கோபம் கொஞ்சம் தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது.
வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படுவதற்கான வாய்ப்புக்களும் இன்று நல்லபடியாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று உறவினர்களின் வருகை இருக்கும் அதன் மூலம் உங்களுக்கு செலவு இருக்கும். கூடுமானவரை செலவை மட்டும் நீங்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த ஒரு நல்ல வாய்ப்பையும் பயன்படுத்துவது ரொம்ப நல்லது. கூடுமானவரை எதிலும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று மற்றவரின் அணுகுமுறை உங்களுக்கு உதவும் விதமாகவே இருக்கும். எளிமையாக அனைவரிடமும் நடந்துகொள்வீர்கள். விலகிய உறவினர்கள் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றியும் பெறுவீர்கள். கௌரவம் அந்தஸ்து உயரும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகளும் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாகவே இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும். எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணம் உங்களுக்கு திருப்திகரமான பயணமாகவே அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்
மீனம் ராசி அன்பர்கள்…!! இன்று முன் யோசனையுடன் தான் காரியங்களை செயல்படுத்த வேண்டும். தொழில் வியாபாரம் வளர சில மாற்றங்கள் வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவசதி கிடைக்கும்.
இன்று அன்பு பெருக்கெடுத்து போகும். அதாவது அக்கம்பக்கத்தினர் இடம் முழு அன்பு கிடைக்கும். மற்றவரிடம் நீங்கள் எளிமையாக பேசுவது அனைவரையும் கவரும் விதமாகவே அமையும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுத் துறையிலும் நல்ல வெற்றி வாய்ப்பினை அடைவார்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்