Categories
உலக செய்திகள்

கொரோனாவில் சிக்கி தவிக்கும் பிரபல நாடு…. “எப்பொழுதும் ஆதரவளிக்க நாங்கள் தயார்”…..WHO கருத்து…!!!!!!!!

 வட கொரியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

வட கொரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா  தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தொற்று  உருவான  கடந்த இரண்டு வருடங்களில்  முதன்முறையாக வடகொரியா தொற்று பாதிப்பை உலகிற்கு தெரிவித்திருக்கின்றது. மேலும் வடகொரியாவில்  தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும்  கொரோனா தொற்று  பற்றி உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கோத்திர பால்சிங் பேசும்போது, வடகொரியாவில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா இன்னும் தடுப்பூசியை  மக்களுக்கு செலுத்தும் பணியை தொடங்காமல் இருக்கின்றது. இதன் காரணமாக  தொற்று மக்களிடையே வேகமாக பரவும் அபாயம் இருக்கின்றது.

மேலும் வடகொரியாவில் தடுப்பூசி வழங்கும் பணிகளில்  அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு  வருகின்றது. பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆதரவு வழங்குவதன் மூலமாக எங்கள் உறுப்பு நாட்டிற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிராந்திய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |