அமெரிக்க தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவீடன் நாட்டின் பிரதமரும், தங்கள் நாடு நேட்டோவில் சேர இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த ஆலோசனையில் அதிகமான உறுப்பினர்கள் நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.