Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு.. பணவரவு உண்டு… ஆரோக்கியம் பலம்பெறும்…!!

மீனம் ராசி அன்பர்கள்…!! இன்று முன் யோசனையுடன் தான் காரியங்களை செயல்படுத்த வேண்டும். தொழில் வியாபாரம் வளர சில மாற்றங்கள் வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவசதி கிடைக்கும்.

இன்று அன்பு பெருக்கெடுத்து போகும். அதாவது அக்கம்பக்கத்தினர் இடம் முழு அன்பு கிடைக்கும். மற்றவரிடம் நீங்கள் எளிமையாக பேசுவது அனைவரையும் கவரும் விதமாகவே அமையும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுத் துறையிலும் நல்ல வெற்றி வாய்ப்பினை அடைவார்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு  நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு  நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |