அருவியில் தவறி விழுந்த தங்க சங்கிலியை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜ்குமார் -லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று கும்பக்கரை பகுதியில் அமைந்துள்ள அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாவண்யா அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி தவறி தண்ணீரில் விழுந்து விட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாவண்யா உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் தேடி பள்ளத்தில் சிக்கி இருந்த சங்கிலியை மீட்டு லாவண்யாவிடம் ஒப்படைத்துள்ளனர்