பிரபல சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா சித்ரா மரணமடைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இதனால் சித்ராவின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அதன்படி சித்ராவின் தாயார் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, ஹேமந்த் வீட்டிலிருந்து கஞ்சா, காண்டம் மற்றும் போதைப் பொருட்கள் இருந்ததாக கூறினார். இதில் சித்ரா சம்பந்தப்ப்டவில்லை. ஏனென்றால் அந்த பொருட்கள் எல்லாம் ஹேமந்த் அறையில் இருந்தது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி என் மகளைக் கூட்டிக்கொண்டு போனான். அப்போது என் மகளின் முகம் வாடிப்போய் இருந்ததால் நான் போகவேண்டாம் என்று கூறினேன். ஹேமந்த் அம்மாவும் அப்பாவும் எல்லாத்தையும் மறைத்துவிட்டார்கள். ‘எங்களுக்கு பொண்ணு இல்லை எங்களின் பொண்ணு மாதிரி பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி கூட்டிட்டு போனாங்க கடைசியில இப்படி பண்ணிட்டாங்க. அவன் ஜாதகத்திலேயே அவன் கோவக்காரன் என்றார்கள், நீ கோவக்காரன் என்பதால் உனக்கு என் மகளைக் கொடுக்க முடியாது என்று கூறினேன். அதற்கு அவன் கோபம் எல்லாம் 5 நிமிஷம் தான் அம்மா என்று கூறினான். ஐந்து நிமிட கோபத்தில் என்ன வேணாலும் நடக்கும் என்று கூறினேன், நான் சொன்னது போலவே ஆகிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் என் பொண்ணு குடிகாரி, சிகரெட் பிடிப்பார் என்பதெல்லாம் பொய். குடிச்சுட்டு நடக்க முடியுமா? தனியா கார் ஒட்டிட்டு போவா, குடிச்சிருந்தா போலீஸ் பிடிப்பார்கள்? ஏன் பிடிக்கல எல்லாம் ஹேமந்த் வேலை, என் மகளின் பெயரும் கெட்டுப் போய்விட்டது. மேலும் அவளுடைய உடம்பில் காயங்கள் இருந்தது ஆம்புலன்ஸில் அவலுடைய உடம்பை வைத்திருந்தபோது போட்டோ எடுத்தோம். ஆனால் எங்களை போலீஸ் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. சித்ராவின் கழுத்தில் கடித்து பல்லுப்பட்டு காயம் இருந்தது என்று கூறி சித்ராவின் அம்மா அந்த போட்டோ ஆதாரங்களை காட்டினார்.