சீனா மற்றம் பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த அபாயகரமான சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் சீனாவில் ஹூபே மாகாணத்தில் தங்கியிருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியை இந்திய வெளியுறவுத் துறை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “சீனாவின் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் ஹூபே மாகணத்திலிருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளோம். இந்திய தூதரகம் சீனா அரசு அலுவலர்களின் உதவியோடு அதற்கான வழிமுறைய ஆராய்ந்து வருகிறது” எனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
ஹூபே மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் உள்ள மக்கள் வெளியூர்களுக்கு செல்ல சீன அரசு தடை விதித்துள்ளது. சீன புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பயணிகள் அந்நாட்டில் படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பதற்றம் தொற்றியுள்ளது.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நோய் மேலும் பரவுவதை தடுக்க உலகம் முழுதும் உள்ள மருத்துவ அலுலர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய இந்திய விமான நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
⚠️ #CoronaVirusOutbreak Update
We have begun the process to prepare for evacuation of Indian nationals affected by the situation arising out of nCorona-2019 virus outbreak in Hubei Province, China. (1/2)
— Randhir Jaiswal (@MEAIndia) January 28, 2020