கே ஜி எஃப் 2 படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அப்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: ” ‘கேஜிஎஃப் 2 படத்தை பார்த்தேன். படத்தின் கதை, திரைக்கதை, எடிட்டிங் ஆகியவை மிகப்பெரும் வியப்பை அளித்தன. ஆக்சன் காட்சிகள், வசனங்கள் மிக அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைலான, மாஸ் ஹீரோவாக யாஷை காட்டியிருந்தார்கள். எங்களுக்கு ‘பெரியப்பா’ அனுபவத்தை தந்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி. ஸ்டன்ட் இயக்குனர் அன்பறிவின் உழைப்பு வெறித்தனமாக இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
கே ஜி எஃப் 2 படத்தில் இடம் பெற்ற பெரியப்பா காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஒற்றை தங்க கட்டியை மீட்க செல்லும் ராக்கி பாய் போலீஸ் நிலையத்தை பெரியம்மா என்ற மிஷின் துப்பாக்கியை வைத்து துவம்சம் செய்வார். இதனை குறிப்பிட்டு சங்கர் டுவிட் செய்துள்ளார்.