Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில்” காணாமல் போன 18 பேர் மற்றும் பொருட்கள் மீட்பு…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்…!!!!

கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில் காணாமல் போன 18 பேர் மற்றும் பொருள்கள் அனைத்தும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிரசு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு வேலூர் மட்டுமின்றி திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நிறைய பக்தர்கள் வந்துள்ளார்கள். இதனால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அதனால் கூட்ட நெரிசலில் பலர் தங்களது உடைமைகளையும் தொலைத்து உள்ளார்கள். சிலர் காணாமலும் போய்விட்டார்கள். அவர்களை காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருட்களை தொலைத்துவிட்டதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் தவறவிட்ட மூன்று செல்போன், இரண்டு கைப்பை, இரண்டு மூக்கு கண்ணாடி, 3 பர்ஸ், 3 வாகனம் சாவி போன்றவை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் காணாமல் போன முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 18 பேர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Categories

Tech |