Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

5 வயதில் என்னொரு திறமை….”தேதியை சொன்னால் கிழமையை சரியாக கூறும் சிறுவன்”…. பாராட்டிய கலெக்டர்…!!!

2022, 2023 வருடங்களில் உள்ள தேதியை கூறினால் கிழமையை சரியாக கூறும் சிறுவனை கலெக்டர் பாராட்டு இனிப்பு வழங்கினார்.

வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். இவருடைய மனைவி சங்கீத பிரியா. இந்த தம்பதிகளுக்கு ரக்‌ஷன்(5) என்ற மகன் இருக்கின்றான். ரக்‌ஷன்  2022, 2023 ஆம் வருடங்களில் உள்ள அனைத்து தேதிகளும் என்ன கிழமைகளில் வருகின்றன என்பதை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துள்ளான். அதாவது இந்த இரு வருடங்களில் ஏதேனும் ஒரு தேதியை சொன்னால் அந்த தேதி என்ன கிழமை வரும் என்று சரியாக சொல்லுவான். இந்தத் திறமையை அவனுடைய பெற்றோர்கள் தெரிந்து கொண்டார்கள்.

இதனை அடுத்து அந்த சிறுவனை பெற்றோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று கூட்டிவந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து சிறுவனின் திறமையை கலெக்டரிடம் தெரிவித்தார்கள். அதன்பின் பல்வேறு தேதிகளை சொல்லி கலெக்டர் சிறுவனிடம் கேட்டார். அப்போது சிறுவன் அந்த தேதிகளில் வரும் அனைத்து கிழமைகளையும் சரியாக கூறினான். இதை பார்த்து கலெக்டரை ஆச்சரியமடைந்தார். மேலும் சிறுவனைப் பாராட்டி இனிப்பு கொடுத்தார். மேலும் சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

Categories

Tech |