வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த தினகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த நகர்மன்ற உறுப்பினர் ம. மனோஜ், வருவாய் துறை அதிகாரி உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.