Categories
உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தில்….. தோல்வியில் முடிந்த…. அதிபருக்கு எதிரான தீர்மானம்….!!!

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை எதிர்த்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையற்ற தீர்மானம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க தாக்குதல் நடத்த தொடங்கினர். அதன் பிறகு நாட்டின் பிரதமராக ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

நாட்டின் நிதி நெருக்கடியையும், அரசியல் குழப்பத்திற்கும் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அதில் இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை எதிர்த்து நம்பிக்கையற்ற தீர்மானம் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு 68 நபர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் 119 பேர் இதனை எதிர்த்து வாக்களித்ததால் நம்பிக்கையற்ற தீர்மானம் தோல்வியடைந்திருக்கிறது.

Categories

Tech |