Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பிளாஸ்டிக் பொருளா?…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடையின் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

 பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில்  அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகர்மன்ற  அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர் கார்த்திகேயன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக்  கவர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |