பாபநாசம் காரையாறு அணை நீர்வரத்து கோடை மழை காரணமாக அதிகரித்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் காரையாறு அணையானது 143 அடி நீர் மட்டத்தை கொண்டுள்ளது. இந்த அணையின் நீர்வரத்தானது சென்ற சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது.
நீர் மட்டம் 46.60 அடியாக இருந்த நிலையில் தற்போது 49.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.