ரஷ்ய நாட்டிலுள்ள மாஸ்கோவில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். இதில் சில நாய்கள் ரயிலில் ஏறி ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி மாலை நேரத்தில்தான் ஏறிய இடத்திற்கே திரும்ப வந்துவிடும். இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு நாய்களைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதாவது நாய்கள் சரியாக ரயிலில் ஏறி விட்டு மீண்டும் அதே இரயிலில் எப்படி வருகிறது என்பதுதான்.
ஆனால் ரயில்வே நிலையத்தில் ரயில்களின் நேரம் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படும். அந்த அறிவிப்பின்படி தான் நாய்கள் சரியான ரயிலில் ஏறி விட்டு மீண்டும் தான் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும். அதுமட்டுமின்றி நாய்களுக்கு மோப்ப சக்தி இருப்பதால் தான் ஏற வேண்டிய ரயிலை சரியாக மோப்பம் பிடித்து ஏறி விடும். இந்நிலையில் ரயிலில் ஏறும் நாய்கள் பயணிகளை தொந்தரவு செய்யாது. இதனையடுத்து பயணிகளும் நாய்களுக்கு உணவு பொருட்களை சாப்பிடுவதற்கு கொடுப்பார்கள். இந்த நாய்களுக்கு இருக்கும் அறிவை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.