இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷ்ய நாடு 10-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்திருந்தன. இதை அடுத்து இந்த போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் பெரும் வாய்ப்பானது இந்திய நாட்டிற்கு கிடைத்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவிற்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரல்களாக கச்சா எண்ணெய் இறக்குமதியானது உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவானது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த மே மாதம் 4 லட்சத்து 87 ஆயிரத்து 500 பேரல்களாக உயரும். இவ்வாறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.