நம்முடைய வீடுகளில் எவர்சில்வர் பாத்திரங்களை தான் அதிகமாக பயன்படுத்துவோம். இந்த பாத்திரங்களை நாம் சரியாக பராமரிக்காவிட்டால் சீக்கிரம் துருபிடித்து கருப்பாகிவிடும். இந்த துருவால் நாளடைவில் ஓட்டை விழும் வாய்ப்பு உள்ளது. அதேபோல தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் கருவிகளிலும் துரு ஏறிக் கிடப்பதும் உண்டு. இந்த துருவை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அவற்றைக் கொண்டு துருப்பிடித்த இடங்களில் நன்றாக தேய்க்கவேண்டும் பாத்திரத்தில் உள்ள துருவை நீக்க உதவுகிறது. பிறகு சாதாரண நீரில் கழுவி எடுக்கலாம். பெரிய பாத்திரங்களில் உள்ள துருவை போக்க பேக்கிங் சோடாவை எல்லா இடத்திலும் தூவிவிட்டு 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து பேக்கிங் சோடா உள்ள இடங்களை ஸ்கரப்பர் கொண்டு தேய்த்தால் துரு நீங்கி விடும். துருப்பிடித்த பாத்திரங்களில் வினிகரை ஊற்றி டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால் துரு நீங்கிவிடும். எலுமிச்சை பழம் மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவு எடுத்துக்கொண்டு துருப்பிடித்த இடங்களில் தேய்த்தால் துரு நீங்கிவிடும்.