கொடிய கொரோனா வைரஸ் பற்றி பஞ்சாங்கத்தில் முன்னதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
பஞ்சாங்கம் அல்லது ஐந்திறன் என்பது இந்து கால கணிப்பு முறையின் படி , கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் என்ற என்பது வடமொழிச்சொல், அதாவது (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமயம் சம்பந்தமான விடயங்களுக்கும்,ஜோதிட கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்தும் முன்னதாகவே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாங்கம்:
விஷ ஜந்துகள் அதிகமாக இன விருத்தி அடையும், விஷ ஜந்துகளால் மக்களுக்கு அதிக தொல்லைகள் ஏற்படும். ஒரு புதிய வைரஸ் நோய் மேற்கு திக்கில் இருந்து உற்பத்தியாகும்.- என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பஞ்சாங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது போல் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு வெளவாலில் இருந்து கட்டுவிரியன் பாம்புகளுக்கு பரவி அதன் மூலமாக சீன மக்களிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் பஞ்சாங்கத்தில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நல்ல மற்றும் சில கெட்ட விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்புகள் பல சமயங்களில் நடந்திருக்கலாம் அல்லது சில சமயங்களில் நடக்காமலும் இருக்கலாம்.
இருப்பினும் நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்திருப்பது ஆச்சரியம் ஊட்டும் வகையில் உள்ளது.