Categories
தேசிய செய்திகள்

“அவளுக்கு சேலை கட்ட தெரியல” கடிதம் எழுதிவிட்டு….. கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் முகுந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் சமாதான் சாபலே (24). இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை (30) திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் கடிதம் இருந்ததை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனது மனைவிக்கு சரியாக சேலை உடுத்தவும், பேசவோ, மற்றும் நடக்கவும் தெரியவில்லை என அவர் எழுதியிருந்தார். திருமண வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்துது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |