Categories
பல்சுவை

ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் ரொம்ப அவசியம்…. ஏன் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!

அலுவலகங்கள் மட்டுமல்லாமல் நமது வீட்டிலும் அழகை கூட்டுவது ஜன்னல்களில் மாற்றும் திரை சீலைகள். சுவர் வண்ணத்திற்கு ஏற்றவாறு திரைசீலை வண்ணமும் இருக்க வேண்டும் என்று பல திட்டங்கள் இருக்கும். வெறும் அழகுக்காக மட்டுமில்லாமல் வீட்டு ஜன்னல்களில் தொங்கும் திரை சீலைகளில் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது.

வீட்டிலுள்ள ஜன்னல்களில் தொங்கவிடப்படும் திரை சீலைகள் வீட்டிற்கு மேலும் அழகைக் கொடுக்கும். நம்முடைய ரசனைக்கு ஏற்றவாறு பல்வேறு வண்ணங்களுக்கு ஏற்ப படுக்கையறை விரிப்புகள், திரை சீலைகள் அமைத்துக் கொள்வதன் மூலமாக வீட்டின் அழகை பன்மடங்கு அதிகரிக்க முடியும். இது நம்மை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க உதவும். ஜன்னலில் இருக்கும் திரை சீலைகள் ஜன்னல்கள் வழியாக நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுக்க உதவுகிறது. பகல் நேரங்களில் நேரடியாக சூரிய ஒளி உள்ளே வந்து கண்களை கூசச் செய்யும். அதனைத் தடுப்பதற்கு இவை உதவுகின்றன. இரவு நேரங்களில் வெளியில் இருந்து வரும் வெளிச்சத்தை கட்டுப்படுத்துகிறது. வீட்டிற்குள் வரும் இயற்கை ஒளியின் அளவை நிர்வகிக்க இவை சிறந்தவை. ஒவ்வொரு அறைக்கும் ஏற்றபடி திரை சீலைகள் அமைப்பது முக்கியம்.

அதுமட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து விடுவார்கள் என்று அடிக்கடி நாம் ஜன்னலை மூடி வைத்து விடுவோம். ஆனால் ஜன்னலுக்கு திரை சீலைகள் அமைப்பதன் மூலம் எப்போதும் ஜன்னலை மூடாமல் திறந்து வைக்கலாம். உங்களின் தனியுரிமையை பாதுகாக்க திரைச்சீலைகள் பொருத்தமானவை.

அதுமட்டுமல்லாமல் ஜன்னலுக்கு திரை சீலைகள் வெப்பநிலையில் மட்டுமல்லாமல் குளிர் நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருக்கும். குளிர்காலத்தில் ஜன்னலை திறந்தால் ஜில்லென்று காற்று வீட்டுக்குள் வரும். ஆனால் ஜன்னல்களில் திரை சீலைகள் இருக்கும்போது காற்றைத் தடுத்து மிதமாக தருகின்றது.

அதிலும் குறிப்பாக ஜன்னல்களில் திரைச்சீலைகள் தொங்கும் அதன்மூலம் வெளியிலிருந்து வரும் தூசி வராமல் தடுக்கிறது. தூசி அனைத்தையும் வடிகட்டி உள்ளே காற்றை மட்டும் அனுமதிக்கும். அதனால் தூசிகள் நிறைந்திருக்கும் திரைச்சீலைகளை அடிக்கடி சுத்தம் செய்து அலசி பயன்படுத்த வேண்டும்.

உங்களது படுக்கை அறையில் தென்படும் சிறு வெளிச்சம் கூட உங்கள் தூக்கத்தில் தடைகளை உண்டாக்கலாம். ஓய்வு மற்றும் தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது மாசுபாடு ஒளி ஜன்னல் வழியாக ஊடுருவி நாள் தூக்கமின்மை எதிர்கொள்ள நேரிடும். எனவே அடர்ந்த திரைச்சீலைகள் படுக்கை அறைகளில் அமைதியான சூழலை உறுதி செய்து உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். வெளிச்சத்தை தவிர்க்க இரட்டடிப்பு திரை சீலைகள் சிறந்தவை. இது இரவு மற்றும் பகல் என எல்லா நேரங்களிலும் உங்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.

Categories

Tech |