Categories
மாநில செய்திகள்

வரும் 30ஆம் தேதி முதல்…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகளின் வசதிகளுக்காக கூடுதல் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயிலை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற 30ஆம் தேதி முதல் திருச்செந்தூர் மற்றும் நெல்லை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – நெல்லை ரயில் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு நெல்லை சென்றடையும். அதனைப் போலவே நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த ரயில்கள் வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Categories

Tech |