கர்நாடக மாநிலமான பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் வாயிலாக பிரபலமானார். இந்த நிலையில் சேத்தனா ராஜ் உடல் கொழுப்பை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்து விட்டார். பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சூழ்நிலையில், வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்படி தனியார் மருத்துவமனை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக தனது மகள் இறந்ததாக நடிகையின் பெற்றோர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். இதற்கிடையில் அறுவை சிகிச்சை வேண்டாம் என என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். எனினும் தமக்கு தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சையின்போது தமது மகளுக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் எனது மனைவியிடம் தெரிவித்தனர். இதனால் நாங்கள் தங்கள் மகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம். அங்கு தன மகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்றுவரதராஜ் தெரிவித்து உள்ளார். போதுமான உபகரணங்கள் இன்றி அறுவை சிகிச்சை செய்ததால் என் மகள் உயிரிழந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் நடிகை சேத்தனாராஜ் கீதா, தொரசானி, ஒலவின நில்தானா ஆகிய கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். அத்துடன் ஹவயாமி என்ற கன்னட சினிமாவிலும் அவர் நடித்துள்ளார்.