Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பு…. பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…!!!

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவருடைய மகள் ஷர்மிளா. ரங்கநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவருடைய மகன் ராஜா. ஷர்மிளாவும், ராஜாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் கடந்த 5-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

அதன்பின் பெங்களூரில் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தகவலை அறிந்த பெண்ணின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனை அடுத்து ராஜா, ஷர்மிளா இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்து மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |