கடந்த 1991-ம் ஆண்டு லீ யுகா என்ற 18 வயது வாலிபர் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளார். இவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென லீ யுகாவுக்கு அவருடைய முதுகுதண்டில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு அரிதான முதுகுத்தண்டு வலி வந்துள்ளது தெரியவந்தது. ஆனால் லீ யுகா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வியாதியை சரிசெய்யும் அளவிற்கு போதிய பணம் இல்லை. இதன் காரணமாக நாளடைவில் அவருடைய முதுகு முழுவதுமாக வளைந்து அவருடைய தலை 2 தொடைகளுக்கும் இடையில் இருந்தது.
இதனால் அவரால் தனியாக நடக்கவோ, சாப்பிடவோ எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் போனது. இதனால் லீ யுகாவின் தாயார் தன்னுடைய மகனுக்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். இவருடைய தாயார் வங்கியில் தன்னுடைய மகனின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் லீ யுகாவை குணப்படுத்த முடியாது என கூறிவிட்டனர். அப்போது ஒரு மருத்துவர் தானாக முன்வந்து உங்களுடைய மகனை நான் குணப்படுத்துகிறேன் என கூறியுள்ளார். அதன்பிறகு லீ யுகாவுக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதன் பிறகு அவர் முழுமையாக குணம் அடைந்து தன்னுடைய தலையை தூக்கி விட்டார்.