Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயமுத்தூரில் நாளை மின்தடை…. இதுல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க…? மின்சார வாரியம் அறிவிப்பு…!!!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் நாளை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை முதல் மதியம் வரையிலும், மாலையிலும் மின்தடை ஏற்பட இருக்கின்றது.இந்நிலையில் மின்தடை ஏற்பட இருக்கின்ற  பகுதிகள் பற்றிய தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டு இருக்கின்றது.

பொள்ளாச்சி துணை மின் நிலையம்: சமத்தூர் மற்றும் கோமங்கலம்புத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மே 19 மாதாந்திர பணி நடக்கவுள்ளதால்அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பொள்ளாச்சி துணை மின் நிலையம்: சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், பக்கோதிபாளையம், மாக்கினாம்பட்டி மற்றும் ஜோதி நகர் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சமத்துார் துணை மின் நிலையம்: ஆவல்சின்னாம்பாளையம், சமத்துார், பில்சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனுார், கரியாஞ்செட்டிபாளையம், கெங்கம்பாளையம் மற்றும் தென்சங்கம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.

கோமங்கலம்புதுார் துணை மின் நிலையம்: கோமங்கலம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி, நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி மற்றும் பூசாரிபட்டி. தகவல்: செந்தில்வேல், செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

மேலும் பூலாங்கிணர் துணை மின் நிலையம், உடுமலை மற்றும் பாலப்பம்பட்டி துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறஇருப்பதால்  நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்: கே.ஜி., துரை, வி.எஸ்., புரம் மற்றும் வி.ஜி., பேப்பர் மில் பீடர்கள், எஸ்.வி.,புரம், ஜீவாநகர், கண்ணமநாயக்கனுார், ஆர்.ஜி.,நகர், மலையாண்டிகவுண்டனுார், மலையாண்டிபட்டணம், குரல்குட்டை, மருள்பட்டி, உரல்பட்டி, சாலரப்பட்டி, பாப்பான்குளம் கிழக்கு, பாப்பான்குளம் மேற்கு மற்றும் சாமராயபட்டி ஒரு பகுதி தகவல்: அறம்வளர்த்தான், செயற்பொறியாளர், உடுமலை.

உடுமலை துணை மின் நிலையம்: குடிமங்கலம் பீடர், பி.ஏ.மில்.,பீடர், சின்ன வீரம்பட்டி, ஏரிப்பாளையம், லட்சுமி நகர், சிவசக்திகாலனி, ஜீவா நகர், சக்தி நகர், அரசு கல்லுாரி, ராமசாமி நகர், யு.கே.சி., நகர், தீயணைப்பு நிலையம்.

Categories

Tech |