Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையிலிருந்து இலங்கைக்கு 1,000 டன் அரிசி… பேக்கிங் செய்யும் பணியை பார்வையிட்ட கலெக்டர்…!!!

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசியை பேக்கிங் செய்யும் பணியை கலெக்டர் அனிஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தில் தெரிவித்தார். அதில் இலங்கை தமிழர்களுக்கு ரூபாய் 80  கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசியும், ரூபாய் 28 கோடி மதிப்பில் மருந்து பொருட்களும், ரூபாய் 28 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர் உட்பட பல அத்தியாவசிய பொருட்களை தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி சுமார் 1000 டன் நல்ல தரமான சன்ன ரக புழுங்கரிசி மதுரையிலிருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்காக பனையூர், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் 12 அரிசி ஆலைகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. இந்த அரிசி 10 கிலோ பையாக பேக்கிங் செய்யபட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது இந்த அரிசியை பேக்கிங் செய்யும் பணியை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று பார்வையிட ஆலைக்கு நேரில் சென்று உள்ளார்.

அப்போது அரசு தரத்தில் எந்த குறையும் இருக்கக் கூடாது. பேக்கிங் மிகவும் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த அரிசியை அனுப்பி வைக்கும்போது பணிகளை கண்காணிக்க துணை ஆட்சியர் வட்டாட்சியர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் இந்திர வள்ளி உட்பட பல அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |