Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேப்பமூடு மாநகராட்சி பூங்காவில்…. மேம்பாட்டு பணிகள்…புதுப்பொழிவு பெறவுள்ள மிக்-21 ரக பயிற்சி போர் விமானம் ….!!!!

மாநகராட்சி பூங்காவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் மூலம் மிக்-21 ரக பயிற்சி போர் விமானம் புது பொழிவு பெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மக்களின் பொழுதுபோக்கு இடமாக வேப்பமூடு சந்தியில் உள்ள மாநகராட்சி பூங்கா திகழ்கின்றது. இந்த பூங்காவில் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை தினங்களில் நிறைய பொதுமக்கள் இந்த பூங்காவிற்கு வருவார்கள். இந்த பூங்காவில் பொதுமக்கள் கவர்கின்ற வகையில் வண்ண ஓவியங்கள், அலங்கார செடிகள், டைனோசர் சிலை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாது ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட மிக்-21 ரக பயிற்சி போர் விமானமும் பூங்காவை அலங்கரிக்கின்றது. இந்த விமானத்தின் முன் இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

மேலும் இந்த பூங்காவில் கார் பார்க்கிங் வசதியும் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சி பூங்காவில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்தப் பணியில் உடைந்து காணப்படுகின்ற சிற்பங்களை சரி செய்வதும், டைனோசர் சிலைக்கு வண்ணம் அடிப்பதும், குழந்தைகளை கவருகின்ற வகையில் அதிகமான விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மிக்-21 விமானம் புதுபொழிவு பெற இருக்கின்றது. இதன் மூலம் பூங்காவுக்கு அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றன. இதேபோன்று மாநகராட்சி பகுதியில் புதிதாக 8 சாலையோர பூங்காக்கள் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

Categories

Tech |