Categories
உலக செய்திகள்

“கேன்ஸ் திரைப்பட விழா”…. புது சார்லி சாப்ளின் தேவை…. உக்ரைன் அதிபர் பேச்சு….!!!!

பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவானது நேற்று துவங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி காட்சி வாயிலாக உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சாா்பாக தகவல் ஒளிபரப்புத்துறை மந்திாி அனுராக் தாக்கூா் தலைமையில் இந்திய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நடுவா் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளாா். மேலும் கமல்ஹாசன், இசை அமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான், நடிகா் மாதவன், இயக்குநா்கள் பாா்த்திபன், பா.ரஞ்சித், நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் பங்கேற்ற இந்திய பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. வரும் 28ஆம் தேதி வரை இவ்விழா நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான கவுரவத்திற்குாிய நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழாவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உரையாற்றியபோது ” ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த தற்போது புது சார்லி சாப்ளின் தேவை. இதற்கிடையில் சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். இன்றும் சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புது சாப்ளின் தேவை” என்று கூறினார்.

ஜெலென்ஸ்கியின் இப்பேச்சுக்கு பலத்த கரவோசை எழுப்பினா். சென்ற 1940 ஆம் வருடத்தில் வெளியாகிய தி கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படத்தில் ஹிட்லர் பற்றி சார்லிசாப்ளினின் பேசும் வசனத்தை மேற்கோள்காட்டி பேசினாா். இத்திரைப்பட நிகழ்ச்சியில் “மரியூபோலிஸ் 2” என்ற ஆவணப்படம் சிறப்புத் திரையிடப்பட இருக்கிறது. கடந்தமாதம் உக்ரைனில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் லிதுவேனியன் திரைப்படத் தயாரிப்பாளரான மந்தாஸ் குவேடராவிசியஸ் என்பவரால் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |