மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்திரன் தனது நண்பரான கபிலன் என்பவருடன் சேர்ந்து கடந்த 11-ஆம் தேதி மேட்டிருப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக முருகேசன், குமார் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.