Categories
மாநில செய்திகள் வானிலை

கோடை வெயிலில் குளுகுளு அடைமழை…. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!!!!!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான முன்னறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மே 18 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேகமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு இருக்கின்றது.

19.05.2022 அன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருகின்றது. 20.05.2022 முதல் 22.05.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 15, சங்கரிதுர்க் (சேலம்) 13, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 10, ஓசூர் (கிருஷ்ணகிரி) 9, எடப்பாடி (சேலம்) 7, ஒகேனக்கல் (தருமபுரி) 6, திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), ஏற்காடு (சேலம்), ஓமலூர் (சேலம்), தம்மம்பட்டி (சேலம்), தேவாலா (நீலகிரி) தலா 5, மேட்டூர் (சேலம்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), சோழவரம் (திருவள்ளூர்), சேலம் (சேலம்), சந்தியூர் KVK (சேலம்) தலா 4, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), கொடுமுடி (ஈரோடு), பென்னாகரம் (தருமபுரி), பூந்தமல்லி (திருவள்ளூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), குழித்துறை (கன்னியாகுமரி), பொன்னேரி (திருவள்ளூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), தளி (கிருஷ்ணகிரி), கரியகோவில் அணை (சேலம்), களியல் (கன்னியாகுமரி), ACS மருத்துவக்கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 3,குமாரபாளையம் (நாமக்கல்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), வால்பாறை PTO , பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), சூரளக்கோடு (கன்னியாகுமரி), காட்பாடி (வேலூர்), பஞ்சப்பட்டி (கரூர்), லால்குடி (திருச்சி), உசிலம்பட்டி (மதுரை), சத்தியமங்கலம் (ஈரோடு), காங்கேயம் (திருப்பூர்), செங்கம் (திருவண்ணாமலை), தக்கலை (கன்னியாகுமரி), சோலையார் (கோவை), மூலனூர் (திருப்பூர்), ஈரோடு (ஈரோடு), நாகர்கோவில் (கன்னியாகுமரி), மேலலாத்தூர் (வேலூர்), அம்முண்டி (வேலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 2,

வேலூர் (வேலூர்), குடியாத்தம் (வேலூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), மேல் பவானி (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), தருமபுரி PTO (தருமபுரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மணப்பாறை (திருச்சி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), குன்னூர் PTO (நீலகிரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), தாம்பரம் (செங்கல்பட்டு), இரணியல் (கன்னியாகுமரி), பவானி (ஈரோடு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), உதகமண்டலம் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), தருமபுரி (தருமபுரி), பாலக்கோடு (தருமபுரி), பல்லடம் (திருப்பூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஹாரூர் (தருமபுரி), மேட்டுப்பாளையம் (கோவை), பெரியார் (தேனி), KVK காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம்), மாரண்டஹள்ளி (தருமபுரி), பாப்பாரப்பட்டி (தருமபுரி), ஆவடி (திருவள்ளூர்), கன்னிமார் (கன்னியாகுமரி) தலா 1.

18.05.2022, 19.05.2022: தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சதீவு, மாலத்தீவு, கர்நாடகா- கேரளா கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென் கிழக்கு வங்கக்கடல், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 20.05.2022 முதல் 21.05.2022 அன்று வரை: மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், வட கேரளா-கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடல், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 22.05.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல், அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள  நாட்களில் மீனவர்கள் இந்தபகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |