Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. புள்ளிமானை விரட்டி கடித்த தெரு நாய்கள்…. வனத்துறையினரின் செயல்….!!!!

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  ஊடேதுர்க்கம்  பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி அடக்கம் கிராமத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை  விரட்டி சரமாரியாக கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டி அடித்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  மானுக்கு    சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக உயிரிழந்து விட்டது . இதனையடுத்து கால்நடை மருத்துவ குழுவினர் மானை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |