மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் விர்னோத்கர் என்பவர் கடந்த மே 9-ஆம் தேதி ஸ்ரேயா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கோவாவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு மே 13-ஆம் தேதி அறையில் இருந்து வெளியே சென்ற கணேஷ் மீண்டும் விடுதிக்குத் திரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தங்கியிருந்த அறையின் கதவு முன் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் விடுதி அறைக்கு கணேஷ் google.pay மூலம் பணம் செலுத்தி எது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் அந்த கூகுள் பே நம்பரை கொண்டு விசாரணை செய்தபோது கணேஷ் மகாராஷ்டிராவில் இருப்பது தெரியவந்தது.
உடனே விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், மே 10ஆம் தேதி ஸ்ரேயாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. அதன் பிறகு அடுத்த நாள் நான் அறையை பூட்டிவிட்டு சென்று விட்டேன். அவர் உயிரிழந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறியுள்ளார். அந்தப் பெண் எப்படி இறந்தார் என்பது குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இருந்தாலும் அவரை ஏன் உள்ளே வைத்து அறையினை பூட்டி சென்றார் என்ற காரணத்தை கணேஷ் கூறாததால் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.