சென்னை மாநகராட்சி 10 வது மண்டலம் 127 வது வார்டு முதல் 142 வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி சென்னை மாநகர மேயர் கடந்த மே மாதம் 6 ம் தேதி ஆய்வு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் பிரியா ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் சுகந்தி ப் சிங் பேடி, கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தின்போது அனைத்து அம்மா உணவகங்களில் உணவு தரமான முறையில் வழங்க வேண்டுமெனவும் மேயர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை கூறி உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்பின் மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்கள் முறையாக செயல்படாமல் இருக்கின்றது. அது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை பெருந்தன்மையோடு நடத்தி வருகின்றோம்.
பல இடங்களில் அம்மா உணவகங்கள் மக்கள் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டு இருக்கின்றன என மேயர் பிரியா கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத துணைமேயர் மகேஷ்குமார் உடனே குறுக்கிட்டு அம்மா உணவகத்தில் மாநகராட்சிக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது எனக் கூறி சமாளித்துள்ளார். அம்மா உணவகங்கள் பயன்படுத்தாமல் பூட்டி கிடைப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதனை நல் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது மட்டுமல்லாமல் திமுக அரசு வெகுவாக குற்றம்சாட்டி வருகின்றனர். பிரியா அளித்த பேட்டி தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக திமுக தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்று உள்ளது. இதனை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரையில் செய்தியாளர்களை சந்திக்க கூடாது என மேயர் பிரியாவுக்கு திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த மே 6-ஆம் தேதிக்கு பின் பொது நிகழ்ச்சிகளில் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டாலும் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.