Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கனும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல் கடைக்கோடி குடிமகனுக்கும் திட்டம் போய் சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் பண்ணைக்குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் திறன் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |