Categories
தேசிய செய்திகள்

விரைவில் இருமடங்கு பென்ஷன்…. PF ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

பிஎப் ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது குறைந்தபட்சம் 1,000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது.இந்த தொகையை நீண்டகாலமாகவே உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணம் போதுமானதாக இல்லை என்பதனால் இதை உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை ஏற்கபட்டால் விரைவில் பிஎஃப் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பென்சன் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்று PF ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கான தீர்ப்பு கிடைத்தால் பென்ஷன் பணம் 2500 ரூபாய்க்கு மேல் உயரும் என்று கூறப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்ஷன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஊழியர்களினுடைய அடிப்படை சம்பளம் 15000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும் பென்ஷன் தொகையானது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து மட்டுமே கொடுக்கப்படுகின்றது. இதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை சம்பளம் 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டால் பென்சன் தொகை இன்னும் அதிகரிக்கும். எனவே சம்பளம் வரம்பு 21,000 ஆக விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

Categories

Tech |