வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த அணில் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு நேற்று தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் இலாகா அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் பொருட்களையும் சோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு சிறிய கூடையில் 9 அரியவகை அணில் குட்டிகளை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், வளர்ப்பதற்காக தாய்லாந்தில் இருந்து அணில் குட்டிகளை வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அணில் குட்டிகளை பறிமுதல் செய்து மீண்டும் தாய்லாந்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்ளம் பன்றி மற்றும் குரங்கு குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிப்பிடத்தக்கது.