Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிரான்சில் தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா…. “இந்திய பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு”… வெளியாகிய போட்டோஸ்….!!!!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

பிரான்சில் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கி உள்ளது. 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கின்றார். இந்த விழாவில் இந்திய திரைப்படங்களான ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட், விக்ரம், கோதாவாரி,  மைதிலி படம் துயின், ஆல்பா பீட்டா காமா, பூம்பா ரைடு,  நீரயே ததகலுல்லா மரம் உள்ளிட்டவை திரையிடப்படுகிறது.

இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கேன்ஸ் விழாவில் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |