கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என தகவல் வந்துள்ளது.
பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில் அது உண்மையில்லை என தற்பொழுது தகவல் வந்துள்ளது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வருகின்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நடைபெற இருப்பதால் அவர்கள் திருமண வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் கேன்ஸ் விழாவில் நயன்தாரா பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் வந்ததி என தெரியவந்துள்ளது.