Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்”…. கேன்ஸ் விழாவில் வெளியிடயுள்ள படத்தின் போஸ்டர்….!!!!!

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்” திரைப்படத்தின் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடயுள்ளனர்.

பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் தி லெஜன்ட் திரைப்படத்தின் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருக்கின்றார்கள். ஊர்வசி ரவ்தெலா இத்திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார். இத்திரைப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பிரபு, கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |