Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மதுக்கரை மார்க்கெட் பகுதி கடை ஒன்றில் திடீர் தீ விபத்து”… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!!

மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாளையம்பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் மதுக்கரை மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வீடு திரும்பிய போது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தார்கள். ஆனால் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். மேலும் இந்த விபத்திற்கு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகின்றது.

Categories

Tech |