தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் வரை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தற்போது 53 லட்சமாக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் வேறு எந்த ஆட்சியிலும் செய்யாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு முப்பத்தி எட்டு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் 5 ஆண்டுகளில் பள்ளிகளில் கழிவறை உட்பட 18 ஆயிரம் கட்டடங்கள் கட்டப்படும் எனவும் கூறியுள்ளார். அதிகப்படியான ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Categories