சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 95 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை அதன் விலை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோடை வெயில் மற்றும் அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளி மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் தக்காளி விலை பல மடங்கு உயரலாம் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.