உலகத்தில் மிகவும் விலை உயர்ந்த இறைச்சி கடக்நாத் (அ) காளி மாசி கோழியின் இறைச்சி ஆகும். இந்தக் கோழி கருப்பு நிறத்தில் காணப்படும். அதுமட்டுமின்றி இந்த கோழியின் சதைகளும் கருப்பு நிறத்தில்தான் இருக்கும். இந்த கருப்பு கோழி இனங்கள் மத்திய பிரதேசத்தின் ஜார் மற்றும் ஜபுவாவில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த கடக்நாத் கோழி இனங்களில் பென்சில், கோல்டன், ஜெட் பிளாக் என 3 வகைகள் காணப்படுகிறது. இந்த கோழி இனங்கள் இறைச்சிக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கோழியின் முட்டை கிரீம் நிறத்தில் காணப்படும். இந்த கோழி இறைச்சி மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.
இந்த கடக்நாத் கோழியின் முட்டைகள் ‘டயட் முட்டைகள்’ என அழைக்கப்படுகிறது. இந்த டயட் முட்டைகள் தலைவலி, மயக்கம், ஆஸ்துமா, நெஃப் ரிடிஸ் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இந்த கருப்பு கோழியின் இறைச்சி காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும். இந்தக் கோழியின் இறைச்சி இதயத்திற்கு இரத்த விநியோகத்தை அதிகரிப்பதால் இதய நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மேலும் கடக்நாத் கோழியின் இறைச்சி வெளி நாடுகளில் ஒரு கிலோ 3,80,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.