இந்தியாவில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை நாம் எளிதில் கிழித்து விடலாம். ஏனெனில் ரூபாய் நோட்டுகள் பேப்பரில் தயாரிக்கப்படுவதால் அதை கிழித்துவிட முடியும். ஆனால் கனடாவின் கரன்சி நோட்டுகளை நம்மால் எவ்வளவு முயற்சி செய்தாலும் கிழிக்க முடியாது. அங்கு தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் யாராலும் கிழிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஸ்ட்ராங்காக அச்சடிக்கப்பட்டிருக்கும். கடந்த 1935-ம் ஆண்டு கனடா நாட்டில் முதல் தொடர் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
இந்த ரூபாய் நோட்டுகளை பாங்க் ஆஃப் கனடா வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. இந்நிலையில் கனடா நாட்டில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து வகையான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பாங்க் ஆஃப் கனடா அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது $5, $10, $20, $50, $100 போன்றவைகளில் வழங்கப்படுகிறது. இந்த கனேடியன் டாலர்கள் உள்நாட்டில் CAS, C$, $ போன்றவைகளில் குறிப்பிடப்படுகிறது.