Categories
அரசியல் மாநில செய்திகள்

90%அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது…. தமிழ் தெரிந்தாலே போதும் அண்ணாமலை…. செல்லூர் ராஜூ பதிலடி…!!!!

தமிழக அமைச்சர்கள் 90 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமானம் கூட ஏற தெரியாத இவர்களால் டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதி கூட பெற்று தர முடியாது என்றும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள் என்றும், கோடை காலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல்தான் என்று கூறுவார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அமைச்சர்களுக்கு தமிழ் படிக்க தெரிந்தாலே போதும். ஆங்கிலம் தெரிய வேண்டுமென்று அவசியமில்லை. துறையை சிறப்பாக உன்னிப்பாக அர்ப்பணிப்போடு திறம்பட செய்தாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |