பெங்காலி தொலைக்காட்சியில் நடித்துவந்த பல்லவி டே கொன்றதற்காக சாக்னிக் சக்ரவர்த்தி கைதுசெய்துள்ளனர்.
நடிகை பல்லவி மே 15 அன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி நிலையில் காணப்பட்டார். அவரின்
மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சாக்னிக் சக்ரவர்த்தி பல்லவியுடன் வசித்துவந்தார். பல்லவி தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்த சாக்னிக் சக்ரவர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மேலும் சாக்னிக் பல்லவியை மனரீதியாக துன்புறுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். போலீசார் சோதனையில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மோன் மனே நா சீரியல் மூலம் கவனம் பெற்றவர் பல்லவி. இரண்டு நாட்களுக்கு முன்புவரை படப்பிடிப்பில் நடித்து வந்த அவர் சக ஊழியர்களும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கின்றனர். எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை அவர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.