கிரேட் டேன் நாய்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இந்த நாய்கள் உலகத்திலேயே மிகவும் உயரமான நாய்கள் ஆகும். இந்த வகையைச் சேர்ந்த நாய்கள் சுமார் 111 சென்டிமீட்டர் வரை வளரக் கூடியவை ஆகும். இவைகள் ஜெர்மனியில் தான் முதன்முதலில் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் கிரேட் டேன் நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தாலும், உண்மையில் மிகவும் பாசமான நாய்கள் ஆகும். இதனையடுத்து கிரேட் டேன் நாய்கள் மனிதர்களிடமும், குழந்தைகளிடமும் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகும்.
இந்த நாய்கள் கருப்பு நிறம், மாநிறம், ஹர்லெக்வின், நீலம், பழுப்பு போன்ற பல்வேறு நிறங்களில் காணப்படுகிறது. இவைகள் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் பண்டைய காலங்களில் கிரேட் டேன் நாய்கள் பன்றிகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாய்கள் உலகில் ஒரு சிறந்த நாயாகவும் கருதப்படுகிறது.