தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அத்துடன் இதில் முதலீடு செய்வதால் வங்கிகளை விட இரண்டு மடங்கு லாபம் கிடைக்கின்றது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பு உள்ளது. அதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானியர் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது இதில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி அஞ்சல் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா யோஜனா திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கு ஐந்து வருட கால சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல வகையான திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. வங்கிகளை போலவே அஞ்சல் அலுவலகத்திலும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை பெற முடியும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தபால் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
அதன் காரணமாக அவற்றை தவிர்க்கும் வகையில் அஞ்சல்துறை பயனாளர்கள் பயன் பெறும் வகையில் ஐவிஆர் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த அஞ்சல் சேவையின் இலவச எண்ணான 18002666868 என்ற நம்பரை அறிமுகப்படுத்தியுள்ளது . இதனை தொடர்பு கொண்டு நமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்டறிந்து கொள்ளலாம். இனி தேவையில்லாமல் அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது. இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.